தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சட்டசபையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள்; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

சட்டசபையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள்; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

சட்டசபையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள்; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

9


UPDATED : ஆக 23, 2026 11:32 AM

ADDED : ஆக 23, 2026 11:31 AM

Follow on GoogleFavourite on Google

9

UPDATED : ஆக 23, 2026 11:32 AM ADDED : ஆக 23, 2026 11:31 AM


9
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: சட்டசபையில் தகாத வார்த்தைகளை முன்னாள் அமைச்சர்கள் பயன்படுகின்றனர்; அவர்களுக்கு மாண்பு இருக்கிறதாா? என அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: ஜனநாயக முறைப்படி சட்டசபை நடத்தும் போது நிச்சயமாக அனைவரின் குரல்களுக்கும் பதில் அளிக்கப்பட்டு, இது மாதிரியான சில வார்த்தைகள் இருந்தால் நீக்குவது மரபு; கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமே இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.

அதனால் அந்த வார்த்தைகள் எல்லாம் நீங்கள் கேட்டு இருக்க மாட்டீர்கள். இந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய முக்கியம் இருக்கிறது. ஜனநாயகத்துடன் ஆட்சி நடத்துகிறோம். ஜனநாயகத்துடன் அதற்கான பணிகளை சபாநாயகர் செய்து கொண்டு இருக்கிறார்.

திமுகவினர் பக்கம் சட்டசபையில் கேமராவை திருப்பினால் எப்படி ரீல்ஸ் போட முடியும் என்று மக்களுக்கே தெரியும். நாங்கள் பேசி கொண்டு இருக்கிறோம். முதல்முறை எம்எல்ஏக்கள் நிறைய பேர் சட்டசபையில் இருக்கிறோம்.

நாங்கள் மாண்போடு கருத்துக்களை எல்லாம் முன்வைக்கிறோம்; மக்கள் பிரச்னைகள் குறித்து முன்வைக்கிறோம்; எல்லா விஷயங்களையும் பேசி கொண்டு இருக்கிறோம். அதேபோல் எதிர்தரப்பினர் கருத்துக்களுக்கும் பதில் சொல்லி கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இவர்கள், சட்டசபையில் எதிர்தரப்பில் உட்கார்ந்து கொண்டு, எழுந்து கூச்சல் போடுகிறார்கள்; ஒவ்வொரு வரிக்கு வரி கூச்சல் போடுகிறார்கள். கத்தி கொண்டு இருக்கிறார்கள். அங்கே இருந்து இறங்கி ஓடி வருகிறார்கள். நான் நேரடியாக பார்க்கிறேன்.

சில முன்னாள் அமைச்சர்கள் பின்னாடி உட்கார்ந்து கொண்டு, எங்களுடைய அமைச்சர்கள் பேசும் போது தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள்; சட்டசபையில் சண்டையை நடத்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா? நாங்கள் தவறான எந்த வார்த்தைகளையும் பேசவில்லை. முதல்வர் விஜயை நம்பி எங்களுடைய கட்சிக்கு வந்தவர்களுக்கு எந்த விதத்திலும் எந்த குறையும் இல்லாமல் நிச்சயமாக அவர் பார்த்து கொள்வார். எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

இப்பொழுது பட்ஜெட் கூட்டத்தொடர் தீவிரமாக போய் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கு தேவையான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். ஹிந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையும் மிக சிறப்பாக முடிந்து இருக்கிறது.

சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். நிறைய கோவில்களில் திருப்பணிகளை செய்யும் வேலையை கையில் எடுத்து இருக்கிறோம். குறிப்பாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களை எல்லாம் கையில் எடுத்து திருப்பணிகள் செய்யும் வேலையை முன்னெடுத்து இருக்கிறோம்.

முழுமையாக சிதிலமடைந்த திருக்கோவில்கள் எல்லாவற்றையும் கையில் எடுத்து அதை மீண்டும் புதுப்பித்து வழிபாட்டுக்கு கொண்டு வரும் வேலையை முன்னெடுத்து இருக்கிறோம். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அனைத்தையும் முதல்வர் விஜய் செய்வார். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us