தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தீயநோக்கத்தின் வெளிப்பாடு; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜ குற்றச்சாட்டு

தீயநோக்கத்தின் வெளிப்பாடு; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜ குற்றச்சாட்டு

தீயநோக்கத்தின் வெளிப்பாடு; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜ குற்றச்சாட்டு


ADDED : நவ 25, 2026 01:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 01:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம் தேசிய அளவில் புயலை கிளப்பி வருகிறது. தவெக அரசின் செயலுக்கு பாஜ எம்பி சுதன்ஷூ திரிவேதி கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலமைப்பு புத்தகத்தை கையில் தூக்கிக் கொண்டே இருக்கும் ராகுல், தவெக அரசு அரசியலைமைப்பு சட்டத்தை அவமதித்தது குறித்து என்ன சொல்லப்போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது; இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தவெக அரசு மிகப்பெரிய அரசியலமைப்புச் சட்ட அவமதிப்பை செய்துள்ளது. கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, ஒரே ஒரு நாள் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த உச்சநீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு பின்பற்றவில்லை. அவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவுமில்லை, செயல்படுத்தவுமில்லை.

எப்போதும் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கையில் தூக்கிக் கொண்டே செல்லும் காங்கிரஸ் எம்பி ராகுல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாதது ஏன்?

'காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட சம்பவத்தை விட, என் கோபத்தைத் தூண்டியது வேறு எதுவுமில்லை. ரம்ஜான் பண்டிகையின் போது ஒரு முஸ்லிம் மதகுருவைக் கைது செய்ய அரசு துணியுமா?' என்று முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

நீதிமன்றத்தின் மீதான இந்த அவமதிப்பு, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற இண்டி கூட்டணியின் தீய நோக்கத்தால் உருவானது. சர்வதேச அளவில் ஹிந்துத்துவத்தைச் சிதைக்கும் சதியுடன் இது தொடர்புடையது. இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us