தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்

விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்

விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்

15


ADDED : நவ 12, 2026 07:25 AM

Follow on GoogleFavourite on Google

15

ADDED : நவ 12, 2026 07:25 AM


15
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​புதுடில்லி: 'சர்வதேச அளவில் நெருக்கடியான சூழல் நிலவினாலும், நாட்டின் விவசாயிகளே அரசின் முதல் முன்னுரிமை' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

​2026 - 27ம் ஆண்டிற்கான குளிர்கால பருவ சாகுபடிக்குத் தேவையான பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

ரூ.62,370 கோடி ஒதுக்கீடு


​இந்த குளிர்கால பருவ உர மானியத்திற்காக, சுமார் 62,370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025 - 26ம் ஆண்டின் ரபி பருவ மானியத் தொகையை விட, சுமார் 24,418 கோடி ரூபாய் அதிகம்.

​​மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

​நம் நாட்டின் விவசாயிகள், எப்போதும் எங்கள் அரசின் முன்னுரிமையாக இருந்து வருகின்றனர். உலகளவில் சவாலான சூழ்நிலைகள் நிலவி வரும் போதிலும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு எந்தக் குறையும் வைக்கவில்லை.

இதன் ஒரு பகுதியாக, 2026 - 27 குளிர்கால பருவத்திற்கான உர மானியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, சர்வதேச சந்தையில் ஏற்படும் உர விலை உயர்வு, நமது விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்குத் தடையின்றி நியாயமான, கட்டுப்படியான விலையில் உரங்கள் தொடர்ந்து கிடைக்கும். ​இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us