கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 9 பேர் பலி
கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 9 பேர் பலி
UPDATED : டிச 24, 2025 09:34 PM
ADDED : டிச 24, 2025 08:34 PM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், எதிரே வந்த கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் என்ற இடத்தில் வந்த போது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலைகுலைந்த பஸ் , சாலை தடுப்புகளை தாண்டி மறுதிசையில் எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 கார்களும் உருக்குலைந்ததோடு, 9 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த வந்த போலீசார், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார் என்ற விபரம் குறித்தும் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

