ADDED : நவ 08, 2025 11:41 PM

குல்டாலி: மேற்கு வங்கத்தின் சுந்தரவன பகுதியில் உள்ள ஜலபேரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ரியா சர்தார், 20. பகுல்தலா பகுதியைச் சேர்ந்தவர் ராக்கி நஸ்கர், 20. இரு பெண்களும் 10ம் வகுப்பு வரை படித்துள்ளனர்.
சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமாகி நட்புடன் பழகிய இவர்கள் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து ஒன்றாக வாழ முடிவெடுத்தனர்.
இதைக்கேட்ட வீட்டினர், அதிர்ச்சி அடைந்தனர். பின், சம்மதம் தெரிவித்தனர். கடந்த 4ல், ஜலபேரியாவில் உள்ள பாலேர் சாக் கோவிலில் இருவருக்கும் திருமண நடந்தது.
ம ணப்பெண் உடையில் ரியாவும், மணமகன் தலைப்பாகையுடன் ராக்கியும் மாலை மாற்றி பாரம்பரிய முறைப்படி மணமுடித்தனர்.
நம் நாட்டில், ஓர் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பின்தங்கிய வன கிராமத்தில் அனைவர் சம்மதத்துடன் ஓர் பாலின திருமணம் நடந்துள்ளது.

