எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : நவ 11, 2025 01:18 PM

சென்னை: எஸ்ஐஆர்-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. களப்போராட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கூடியுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) விவகாரத்தில் தேர்தல் கமிஷனை கண்டித்து சென்னை உட்பட 43 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: எஸ்ஐஆர்-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான ஓட்டுரிமையையே பறிக்கும் எஸ்ஐஆர் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம், களப் போராட்டம்.
மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட வார் ரூம், ஹெல்ப் லைன். எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து இன்று நடக்கும் களப்போராட்டத்தில். தமிழகம் எங்கும் பதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் கூடியுள்ளனர்.
தொடர்ந்து செயலாற்றுவோம். நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

