உள்ளடக்கத்திற்கு செல்ல

கப்பலில் பற்றிய தீ; 5 பேர் உயிரிழப்பு, 41 பேர் மாயம்
கப்பலில் பற்றிய தீ; 5 பேர் உயிரிழப்பு, 41 பேர் மாயம்
ADDED : ஆக 02, 2026 03:39 PM

அ நிறம் | அளவு
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் கப்பலில் ஏற்பட்ட தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேரை காணவில்லை.
கிழக்கு ஜாவாவில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய நகரான சூர்யபயா நகரில் இருந்து தெற்கு சுலைவெஸி நகரில் உள்ள மகாசார் என்ற நகருக்கு 271 பேருடன் சென்ற கப்பல், மடுரா தீவு என்ற பகுதியில் தீப்பற்றியது. இது குறித்து கப்பலின் கேப்டன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவசரகால மீட்புப்படையினரும், அருகில் இருந்த கப்பலில் உள்ளவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பலரை காப்பாற்றினர்.
இச்சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேரை காணவில்லை. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.
