UPDATED : நவ 19, 2026 05:30 PM
ADDED : நவ 19, 2026 05:28 PM

- சிறப்பு நிருபர் -
நவம்பர் 19 மற்றும் 20ம் தேதிக்கு இடையே ஐந்து சிறுகோள்கள் பூமிக்கு அருகில் நெருங்கி வரும் என நாசா கூறியுள்ளது. 10 மீட்டர் முதல் 120 மீட்டர் வரை அளவுள்ள இந்த சிறுகோள்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.இவற்றிற்கு 2026விஏ11, 2026 டிபி84, 2026 விடி6, 2018 என்இ1 , 2007 டபிள்யூ கே3 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவற்றில் 2026 விஏ11 என்ற சிறுகோள் தான் பூமிக்கு மிக அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் இருந்து 33.5 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 10 முதல் 22 மீட்டர் அகலம் கொண்டது. வினாடிக்கு 8.9 கிலோ மீட்டர் அல்லது மணிக்கு 32,040 கிலோ மீ்ட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
பூமிக்கு அருகில் வரும் சிறுகோள்களிலேயே 2026 டிபி84 தான் பெரியது என கணிக்கப்பட்டுள்ளது. இது 50 முதல் 110 மீட்டர் வரை விட்டம் கொண்டதாக இருக்கிறது. இன்று பூமியில் இருந்து 46.4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இது வரும்.
2018 என்இ1 என்ற கோள், பூமியில் இருநது 63.8 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடக்கும். இது50முதல் 120 மீட்டர் விட்டம் கொண்டது. இன்று பூமிக்கு அருகில் வரும் சிறுகோள்களில் இது வேகமாக பயணிக்கிறது. இது மணிக்கு 47,880 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
2007 டபிள்யு கே3 என்ற மற்றொரு சிறுகோள் நவம்பர் 19 அன்று 54.7 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியை கடந்து செல்லும்.
2026 விடி6 நவம்பர் 20 அன்று பூமிக்கு அருகில் வரும். இது 40.1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் 12 முதல் 28 மீட்டர் விட்டம் கொண்டது. இதனை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணிக்கின்றனர்.
