இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த அந்நிய சக்திகள் முயற்சி; மோகன் பாகவத்
இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த அந்நிய சக்திகள் முயற்சி; மோகன் பாகவத்
ADDED : நவ 16, 2026 07:28 AM

ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த ஆர்எஸ்எஸின் 'மரு நினாத்-2026' நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது; இன்று இந்தியா அனைவருக்கும் ஒரு நம்பிக்கையாகத் திகழ்கிறது. இந்தியா வலிமை பெறுவதை சுயநலத்தின் காரணமாக உலகின் சில நாடுகள் விரும்பவில்லை. வளர்ந்து வரும் இந்தியாவை பிளவுபடுத்த திட்டம் தீட்டுகின்றன.
உள்நாட்டுக் கலவரங்களைத் தூண்டவும், சிறு அடையாளங்களைப் பெரிதுபடுத்திப் பிளவுகளை உருவாக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அன்று பிரிட்டிஷார் கையாண்ட அதே அரசியல் தந்திரங்களை இன்று உலகின் தீய சக்திகள் கையாளுகின்றன.
நாம் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம். தர்மமே இந்த நாட்டை ஒன்றிணைக்கும். தர்மத்தின் அடிப்படையிலான வாழ்க்கை முறையை வளர்த்தெடுக்க வேண்டும். அந்த நோக்கத்திற்காகவே ஆர்எஸ்எஸ் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது, இவ்வாறு கூறினார்.
