வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
ADDED : ஜூலை 01, 2026 10:26 PM

புதுடில்லி: மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
1989ம் ஆண்டு ஐஎப்எஸ் கேடர் பிரிவைச் சேர்ந்த அதிகாரி விக்ரம் மிஸ்ரி. தற்போது வெளியுறவு செயலாளராக உள்ளார். 2024ம் ஆண்டு முதல் அவர் இப்பதவியை வகித்து வருகிறார்.
அவரின் பதவிக்காலம் ஜூலை 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந் நிலையில் விக்ரம் மிஸ்ரிக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சரவை நியமனக் குழு அடிப்படை விதி 56(d)ன் படி அவரின் பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. 2027ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வகையில் விக்ரம் மிஸ்ரி பதவியில் இருப்பார்.
வெளியுறவுச் செயலாளராக பதவி வகிக்கும் முன்பு விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்தார். ஐகே குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் மோடி ஆகிய 3 பிரதமர்களுக்கும் தனி செயலாளராக பணியாற்றிய தனித்துவ பெருமை பெற்றவர். பல நாடுகளில் உள்ள தூதரகங்களில் பல முக்கிய பதவிகளிலும் பணியாற்றியவர்.
