மேடையில் கலங்கிய சாதனை மாணவிக்கு இலவச வீடு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மேடையில் கலங்கிய சாதனை மாணவிக்கு இலவச வீடு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ADDED : செப் 26, 2025 02:17 PM

சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவிக்கு இலவச வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், ஆலங்குளம் அருகே கழுநீர் குளத்தில் ஒழுகும் வீட்டில் அப்பா உள்ளதாக மாணவி பிரேமா கண்ணீர் மல்க பேசியிருந்தார். மாணவி கண்ணீர் மல்க பேசிய 24 மணி நேரத்தில், வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கருணாநிதி கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.