தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை, விதிமீறல்; அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை, விதிமீறல்; அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை
UPDATED : செப் 24, 2026 07:30 AM
ADDED : செப் 24, 2026 07:29 AM

புதுடில்லி: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை, விதிமீறல்கள் தொடர்பாக அமேசான் உள்ளிட்ட5 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கையை துவங்கி உள்ளது.
இது குறித்து எப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட், பிளிப்கார்ட் இந்தியா மற்றும் ஜெப்டோ ஆகிய 5 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கையை துவங்கி உள்ளது.
தடைசெய்யப்பட்ட, விஷத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விதிமீறலில் ஈடுபட்டதால் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய எப்எஸ்எஸ்ஏஐ அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் குறித்து சமூகவலைதளத்தில் நுகர்வோருக்கு தெரிவித்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், நெஸ்லே இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்படுதாக கூறியிருந்தது. தற்போது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
