மரபணுவில் இருக்கும் தர்மம் நமக்கு வழிகாட்டுகிறது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
மரபணுவில் இருக்கும் தர்மம் நமக்கு வழிகாட்டுகிறது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ADDED : செப் 18, 2026 12:46 PM

போபால்: 'தர்மம் நமது டிஎன்ஏவில் உள்ளது; அது நமக்கு வழிகாட்டுகிறது' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனியில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: இன்றைய காலத்தில் இளைஞர்கள் 'தர்மம்' குறித்து ஈடுபாடு காட்டுவது என்பது அரிதாகவே கேட்கப்படும் ஒரு விஷயமாகும்.
தர்மம் பற்றிப் பேசும்போது, அது முதியவர்களுக்கான விஷயம் என்றும், பகவத் கீதை மற்றும் ராமாயணம் போன்ற நூல்கள் ஓய்வு பெற்ற பிறகு படிக்க வேண்டியவை என்றும் மக்கள் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. தர்மம் என்பது அனைவரும் செய்ய கூடிய ஒன்றாகும். நாம் அதை நம்பாவிட்டாலும் பரவாயில்லை.
சூரியன் உதிப்பதும் மறைவதும் உறுதி; அது இயல்பாகவே நடக்கும். மனிதன் தனது அகங்காரத்தால், அனைத்தும் தன் அதிகாரத்தின் கீழ்தான் இயங்குகின்றன என்று நம்புகிறான். அதனால், இயற்கையான நிகழ்வுகள் கூட தன் விருப்பப்படியே நடக்க வேண்டும் என்றும்,நடக்கின்றன என்றும் தவறாகக் கருதுகிறான்.
ஆனால் உண்மையில் நிலைமை அப்படி இல்லை. தர்மம் நமது டிஎன்ஏவில் உள்ளது; அது நமக்கு வழிகாட்டுகிறது.தர்மம் மதத்திற்கு மேலானது. மோட்சத்திற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
