UPDATED : அக் 22, 2025 04:01 PM
ADDED : அக் 22, 2025 04:00 PM

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று( அக்.,22) காலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்த நிலையில், மாலை ரூ.1,280 குறைந்தது. இதையடுத்து இன்று மட்டும் சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் 1,440 ரூபாய் குறைந்த ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை மேலும் ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று மாலை ஆபரண தங்கத்தின் விலை மேலும் ரூ.1,280 குறைந்து ரூ.92,320க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.11,540க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 5 குறைந்து ரூ.175 ஆக விற்பனை ஆகிறது.