வார இறுதி நாளில் இறங்கிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.280 குறைவு
வார இறுதி நாளில் இறங்கிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.280 குறைவு
UPDATED : ஆக 01, 2026 10:35 AM
ADDED : ஆக 01, 2026 10:29 AM

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 13,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 30) ஆபரண தங்கம் கிராம், 13,230 ரூபாய்க்கும், சவரன், 1,05,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 235 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (ஜூலை 31) தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 13,255 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 1,06,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் வார இறுதி நாளான இன்று (ஆகஸ்ட் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 13,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பு வீடியோ!
இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
