இன்றும் தங்கம் விலை சரிவு; இரு தினங்களில் மட்டும் ரூ.1,920 குறைவு
இன்றும் தங்கம் விலை சரிவு; இரு தினங்களில் மட்டும் ரூ.1,920 குறைவு
ADDED : நவ 11, 2026 10:17 AM

சென்னை: சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் முழுதும் பெரிதும் சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, நவம்பர் மாதத்தில் பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் 6 வாரத்தில் உயர்ந்த தங்கம் விலை, ஒரே ஒரு முறை மட்டுமே சரிவை சந்தித்து.
இந்த வாரத் துவக்கத்தில் (9ம் தேதி) கூட ரூ.760 அதிகரித்து காணப்பட்டது. ஆனால், நேற்று ரூ.260 குறைந்தது. 2வது நாளாக இன்றும் ரூ.1,560 சரிந்துள்ளது. இதன்மூலம், 2 தினங்களில் ரூ.1,920 குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,04,120க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.195 குறைந்து ரூ.13,015க்கு வர்த்தகமாகிறது.
கடந்த இரு தினங்களாக எந்தவித மாற்றமும் இன்றி காணப்பட்ட வெள்ளி விலையும் இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.200க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
