sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சாலைகளை சேதப்படுத்தி 3 நாளுக்கு கொடி கட்டலாம்: அனுமதி தர போலீசுக்கு அரசு உத்தரவு

/

 சாலைகளை சேதப்படுத்தி 3 நாளுக்கு கொடி கட்டலாம்: அனுமதி தர போலீசுக்கு அரசு உத்தரவு

 சாலைகளை சேதப்படுத்தி 3 நாளுக்கு கொடி கட்டலாம்: அனுமதி தர போலீசுக்கு அரசு உத்தரவு

 சாலைகளை சேதப்படுத்தி 3 நாளுக்கு கொடி கட்டலாம்: அனுமதி தர போலீசுக்கு அரசு உத்தரவு

17


UPDATED : டிச 21, 2025 07:04 AM

ADDED : டிச 21, 2025 03:14 AM

Google News

17

UPDATED : டிச 21, 2025 07:04 AM ADDED : டிச 21, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சாலைகளில் தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க, மூன்று நாட்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது .

தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

* தற்காலிகமாக கொடி கம்பங்கள் நிறுவ, நிகழ்ச்சிக்கு ஏழு நாட்களுக்கு முன், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோட்ட அளவிலான துணை குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

* தற்காலிக கொடி கம்பங்களின் எண்ணிக்கை, கொடி கம்பம் மற்றும் கொடிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

* கொடி கம்பங்களுக்கு இடையிலான இடைவெளி, கொடி கம்பங்கள் நிறுவப்படும் இடம் மற்றும் பகுதியை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

* தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க, நிகழ்வுக்கு முந்தைய நாள், நிகழ்வின் நாள் மற்றும் அதன் பிந்தைய நாள் என, மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

* சாலை கட்டமைப்புகளின் மீது, அதாவது மைய நடைபாதை, வடிகால், பாலங்கள் மீது தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.

* தற்காலிக கொடி கம்பத்தின் அதிகபட்ச உயரம், தரைமட்டத்தில் இருந்து 3.50 மீட்டராக இருக்க வேண்டும்.

* மின்சாரம் தாக்குவதை தடுக்க, கொடி கம்பத்தின் மேல்முனையை, பொருத்தமான காப்பு பொருட்களால் மூட வேண்டும்.

* ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், கொடி கம்பங்களை அமைத்தவர்களே முழுப்பொறுப்பு. விபத்து நடந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

* தற்காலிகமாக கொடி கம்பங்களை நிறுவுவதற்கு கட்டணம் உண்டு.

* தற்காலிக கொடி கம்பங்களை, அனுமதி காலம் முடிந்தவுடன் அமைப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் உடனடியாக அகற்ற வேண்டும்.

* சாலை தடுப்பு மையம் மற்றும் பிற தடை செய்யப்பட பகுதிகளில் தற்காலிக கொடி கம்பங்கள் வைத்தால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக, காவல் துறை வாயிலாக வழக்குபதிவு செய்ய வேண்டும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us