தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இனி தங்கம், வெள்ளி இறக்குமதிக்கும் ஜி.எஸ்.டி.,: மத்திய அரசு அறிவிப்பு

இனி தங்கம், வெள்ளி இறக்குமதிக்கும் ஜி.எஸ்.டி.,: மத்திய அரசு அறிவிப்பு

இனி தங்கம், வெள்ளி இறக்குமதிக்கும் ஜி.எஸ்.டி.,: மத்திய அரசு அறிவிப்பு

8


UPDATED : அக் 10, 2026 06:46 AM

ADDED : அக் 10, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 06:46 AM ADDED : அக் 10, 2026 05:18 AM

8


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் வாயிலாக இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி., விலக்கை ரத் து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இத்தகைய இறக்குமதிக்கு இனி 3 சதவீத வரியை செலுத்தி யாக வேண்டும்.

இதுகுறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா டில்லியில் கூறியதாவது: வங்கிகள் வாயிலாக இறக்குமதி செய்யப்படும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஐ.ஜி.எஸ்.டி., விலக்கு சலுகை கடந்த மார்ச் 31 உடன் முடிவடைந்தது. இந்நிலையில், அதை அரசு மேலும் நீட்டிக்கவில்லை. இதையடுத்து, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியும் ஒரே மாதிரியான வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

வரி சலுகை காரணமாக குறிப்பிட்ட ஒரு இறக்குமதி வழிமுறை மட்டும் முன்னு ரிமை பெறுவதை தவிர்க்கவே, ஏப்., 1 முதல் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜி.எஸ். டி., கவுன்சில் கூட்டத்திலும் தெரிவிக்க ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Image 1628734

வரி விலக்கு சலுகை


கடந்த மார்ச் 31ல் முடிவுக்கு வந்த நிலையில், ஏப்., 17 அன்று அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்களின் புதிய பட்டியலை வெளிநாட்டு வர்த்தக பொது இயக்ககம் வெளியிட்டது; ஆனால், வரி விலக்கு தொடர்பான அரசாணை புதுப்பிக்கப்படவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்கள் வாயிலாக, தங்கம் தடையின்றி புழக்கத்தில் இரு ப்பதை உறுதி செய்வதற்கா க, கடந்த 2017ம் ஆண்டு, மு தலில் தங்கம் இறக்குமதிக்கும், பின்னர் வெ ள் ளி மற்றும் பிளாட்டினத்துக்கும் நீ ட்டிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., விலக்கு சலுகை கொ ண்டு வரப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us