821 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு: செப்.9 வரை விண்ணப்பிக்கலாம்
821 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு: செப்.9 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 11, 2026 09:07 PM

சென்னை: 821 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆக.11 முதல் செப்.,9 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
டிஎன்பிஎஸ்சி 2026ம் ஆண்டிற்கான குரூப் 2, 2ஏ தேர்வு ஆக., 11ல் வெளியாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் குறித்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
இந் நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, முதல் நிலை தேர்வு நவ.1ம் தேதி நடைபெறுகிறது. மெயின் தேர்வுக்கான தேதி, முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அறிவிக்கப்படும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பின்னர், அதில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் செப்.13ம் தேதி முதல் செப்.15ம் தேதிக்குள் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் எக்காரணம் கொண்டும் எந்த திருத்தங்கள் மேற்கொள்ளவும் அனுமதி கிடையாது.
இம்முறை மொத்தம் 821 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.
