கோவில்களில் கொடிமரம் அமைக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
கோவில்களில் கொடிமரம் அமைக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
UPDATED : ஜூலை 24, 2026 12:49 AM
ADDED : ஜூலை 23, 2026 11:48 PM

சென்னை: 'கோவில்களில் புதிய கொடிமரம், 'பிரதிஷ்டை' செய்ய, அறநிலையத்துறை கமிஷனர் அனுமதி பெற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.
கோவில்களில் பழுதடைந்த, சேதமடைந்த கொடிமரங்கள், கமிஷனர் அனுமதியுடன் அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வது, வழக்கத்தில் இருந்து வருகிறது.
புதிதாக கட்டப்பட்டு உள்ள கோவில்களிலும், புதிய கொடிமரம் ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இது தொடர்பாக, அறநிலையத்துறை கமிஷனர் வினய், வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுஉள்ளார்.
அதில் கூறியிருப்ப தாவது:
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய, கமிஷனர் அனுமதி பெற வேண்டும்
புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய் வதற்கு, குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாகவே, கமிஷனர் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்
சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர், தக்கார், அறங்காவலர் தீர்மானத்துடன், கமிஷனர் அனுமதிக்கு, முன்மொழிவு அனுப்பப்பட வேண்டும்
புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு, துறை சட்ட விதிகளுக்கும், ஆகம நெறிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்க வேண்டும்
கோவிலுக்கு புதிய கொடிமரம் உபயதாரரால் வழங்கப்பட்டிருந்தால், அவரது சம்மத கடிதம் இணைக்கப்பட வேண்டும்
புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின், செப்பு, பித்தளை, தங்கம், தங்கமுலாம், தங்கமின் முலாம் பூசிய கவசங்களைப் பொருத்த, துறை அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
