கார்த்திகை தீபத்திருநாள்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கள்
கார்த்திகை தீபத்திருநாள்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கள்
ADDED : நவ 24, 2026 08:33 AM

- நமது நிருபர் -
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: கார்த்திகை தீப நன்னாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இந்த புனிதத் திருநாள், சேவையின் வாயிலாக பிறருக்கு உதவும் பண்பை நமக்கு உணர்த்துகிறது. புனித நீராடல், தான தர்மங்கள் மற்றும் தீபமேற்றுதல் போன்ற சடங்குகளை உள்ளடக்கிய இந்த மரபு, அனைவரது வாழ்விலும் பக்தி, நம்பிக்கை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தட்டும் என்பதே எனது உளமார்ந்த விருப்பம்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்: கார்த்திகை தீப நன்னாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நமது கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. புனித நீராடல் மற்றும் தீபமேற்றுதல் போன்ற சடங்குகளுடன் கொண்டாடப்படும் இந்தத் திருநாள், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்: தென்னாடுடைய சிவனே போற்றி.எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. அன்பும் அருளும் அறமும் ஆன்மிக ஒளியும் உலகெங்கும் தழைத்தோங்கச் செய்யும் திருக்கார்த்திகைத் திருநாளில், சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவோம். திருமுறைகள் போற்றும் திருவருள் நாயகனாம் ஈசனின் பெருமையைப் பறைசாற்றும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஏற்றப்படும் மகாதீபம், வெறும் தீப ஒளியல்ல; அது ஞானத்தின் ஒளி, அறத்தின் ஒளி, இறைநம்பிக்கையின் ஒளி, மெய்ஞ்ஞானத்தின் பேரொளி.
“நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க!” என்ற திருவாசகத்தின் அருள்மொழி ஒவ்வொரு இல்லத்திலும் ஒலிக்கட்டும். சிவசிந்தனை ஒவ்வொரு உள்ளத்திலும் நிலைக்கட்டும். அப்பர் பெருமானின் சிவபக்தியும், திருஞானசம்பந்தரின் தமிழிசையும், சுந்தரரின் இறையன்பும், மாணிக்கவாசகரின் அருள்மொழிகளும் போற்றிப் பாதுகாக்கும் நமது தமிழ்ச் சைவ மரபு என்றும் தழைத்தோங்கட்டும். அறியாமை அகன்று ஞானம் பிறக்கட்டும். அகந்தை அழிந்து அன்பு மலரட்டும். பகைமை மறைந்து சகோதரத்துவம் பெருகட்டும்.
இல்லங்கள் தோறும் இன்பமும், உள்ளங்கள் தோறும் அமைதியும், மக்கள் வாழ்வில் வளமும் நலமும் பெருகட்டும். திருவண்ணாமலையின் மகாதீபப் பேரொளி உலகெங்கும் அமைதியையும் நம்பிக்கையையும் பரப்பட்டும். எல்லோருக்கும் எல்லாம் வல்ல அண்ணாமலையாரின் திருவருள் துணை நிற்கட்டும். அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை: தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய திருக்கார்த்திகை நன்னாளில், தீபத்தின் ஒளி நம் இல்லங்களில் வெளிச்சத்தை நிரப்பட்டும். அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அன்பு, அமைதி, நம்பிக்கை, நற்சிந்தனைகள் நிறையட்டும்.
இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
