தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காசி தமிழ்ச் சங்கமம் துவங்கியுள்ளதில் மகிழ்ச்சி; பிரதமர் மோடி பெருமிதம்

காசி தமிழ்ச் சங்கமம் துவங்கியுள்ளதில் மகிழ்ச்சி; பிரதமர் மோடி பெருமிதம்

காசி தமிழ்ச் சங்கமம் துவங்கியுள்ளதில் மகிழ்ச்சி; பிரதமர் மோடி பெருமிதம்


ADDED : நவ 29, 2026 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 07:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

உத்தரபிரதேசம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தின் 5ம் ஆண்டு நிகழ்வை துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காசி தமிழ்ச் சங்கமம் 5.0 இன்று துவங்கியுள்ளதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் இருந்தும், நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் அமரத்துவமிக்க காசி நகரத்திற்கு வருகைதரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த ஆண்டு சங்கமத்தின் கருப்பொருளான 'திருக்குறள் பயில்வோம்' என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. மானிட வாழ்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தாழமிக்க வழிகாட்டுதல்களை திருவள்ளுவப் பெருந்தகையின் ஞானம் வழங்குகிறது. 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது அற்புதமானது.

திருவள்ளுவப் பெருந்தகையின் சிந்தனைகள், இளைஞர்களிடையே இன்னும் பரவலாகச் சென்றடைய இதுபோன்ற முன்முயற்சிகள் வழிவகுக்கட்டும். தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, காசி தமிழ்ச் சங்கமம் கலாசார, அறிவுசார் பரிமாற்றங்களுக்கான ஒரு சிறப்புமிக்க தளமாகப் பரிணமித்துள்ளது. அதே வேளையில் உன்னத பாரதம் என்ற ஒருமைப்பாட்டுணர்வும் இந்த சங்கமத்தால் வலிமையடைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us