தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கோவை, நீலகிரி உட்பட 22 மாவட்டங்களில் இன்று கன மழை

கோவை, நீலகிரி உட்பட 22 மாவட்டங்களில் இன்று கன மழை

கோவை, நீலகிரி உட்பட 22 மாவட்டங்களில் இன்று கன மழை

2


ADDED : ஜூன் 02, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : ஜூன் 02, 2026 06:44 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கோவை, நீலகிரி உட்பட, 22 மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை: தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, தர்மபுரி மாவட்டம் திருமல்வாடி, வெள்ள கவுண்டன்பாளையம் பகுதிகளில் தலா, 9 செ.மீ., மழை பெய்துள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 7 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us