UPDATED : ஜன 08, 2026 02:37 PM
ADDED : ஜன 08, 2026 02:16 PM

சென்னை: திருவாரூர், நாகை ஆகிய 2 மாவட்டங்களுக்கு நாளை (ஜன.09) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக நாளை (ஜனவரி 09) திருவாரூர், நாகப்பட்டினத்தில் மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 10ம் தேதி
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்
* புதுக்கோட்டை
* தஞ்சாவூர்
* அரியலூர்
* தஞ்சாவூர்
* கள்ளக்குறிச்சி
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
ஜனவரி 11ம் தேதி
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* கடலூர்
* மயிலாடுதுறை
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நாகை
* திருவாரூர்
* தஞ்சை
* அரியலூர்
* திருச்சி
* கள்ளக்குறிச்சி
* திருவண்ணாமலை
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
* சென்னை
* திருவள்ளூர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

