UPDATED : அக் 25, 2026 05:19 PM
ADDED : அக் 25, 2026 04:22 PM

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருந்தது.
மதியம் 2 மணி முதல் கோவையில் பல பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது. காந்திபுரம், உக்கடம், கலெக்டர் அலுவலகம், மாநகர பகுதிகள் ஆர்எஸ்புரம்,குனிமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதித்தது.
( பிற்பகல் 3:30 மணியளவு)
மழை அளவு
ஆர்.எஸ்.புரம் - 7.7 செமீ
குனியமுத்துார் - 4.98 செமீ
சாய்பாபா காலனி - 4.28 செமீ
வடவள்ளி- 4.76 செமீ
வெள்ளலுார்- 4.7 செமீ
ஒத்தக்கால் மண்டபம்- 4.1செமீ
மதுக்கரை- 1.8செமீ
காரமடை- 1.5செமீ
கவுண்டம்பாளையம் -1.5செமீ
ஒண்டிபுதுார்- 2.34செமீ
காந்திபுரம்- 7.74செமீ
சிங்காநல்லுார்- 2.0செமீ
வெள்ளப்பெருக்கு
கனமழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து, அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது.பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
