தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஆபத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: பெங்களூரு வாசகர் நெகிழ்ச்சி

 ஆபத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: பெங்களூரு வாசகர் நெகிழ்ச்சி

 ஆபத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: பெங்களூரு வாசகர் நெகிழ்ச்சி

2


UPDATED : செப் 30, 2026 04:26 AM

ADDED : செப் 29, 2026 10:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 04:26 AM ADDED : செப் 29, 2026 10:15 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: படிக்கட்டில் இருந்து இறங்கும் போது கால் தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்ட வாசகருக்கு, 'தினமலர்' சந்தா காப்பீடு திட்டம் மூலம், ஒரு லட்சம் ரூபாய் கிடைத்து பயனடைந்தார்.

பெங்களூரு முருகேஷ்பாளையா நஞ்சாரெட்டி காலனி, 'ஏ' கிராசில் வசிப்பவர் சிவலிங்கம், 63. இவர், அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி காலை, தன் வீட்டின் இரண்டாவது தளத்தில் இருந்து இறங்கும் போது, கால் தவறி விழுந்தார். இதில், அவரது இடது காலில் அடி பட்டு, வலி தாங்க முடியாமல் அலறினார்.

உடனே அவரது மகன், நண்பர்கள் சேர்ந்து அவரை, 'ஹொஸ்மெட்' தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்தபோது, வலது கால் முட்டியின் கீழ் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

மறுநாள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, 'ஸ்டீல் ராடு' பொருத்தப்பட்டது. இதற்கு மொத்தம் 2.50 லட்சம் ரூபாய் செலுத்தி, கடந்த 17ம் தேதி மருத்துவனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

இவர், 'தினமலர்' சந்தாதாரராக இருப்பதை நினைவு கூர்ந்து, தினமலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, ஆண்டு சந்தா மூலம் பெறப்பட்ட 'யுனைடெட் இன்சூரன்ஸ்' குறித்து தகவல் தெரிவித்தார். அவர்களது உதவி, வழிகாட்டுதலுடன், தேவைப்பட்ட அனைத்து ஆவணங்களையும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

கடந்த 24ம் தேதி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இருந்து இவரை தொடர்பு கொண்டு, மேலும் சில தகவல்களை கேட்டறிந்தனர். இதையடுத்து, அவர் வங்கி கணக்கில், 1 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

இது குறித்து, சிவலிங்கம் உருக்கத்துடன் கூறியதாவது: என் அறுவை சிகிச்சைக்கு பலரிடம் கடன் வாங்கி, மருத்துவமனை பில் தொகையை செலுத்தினேன். விபத்து சிகிச்சைக்கு, தினமலர் நிறுவனம் மூலம், 'யுனைடெட் இன்சூரன்ஸ்' வழங்கிய ஒரு லட்சம் ரூபாய், என் பண நெருக்கடியை சமாளிக்க உதவியது. இக்கட்டான சூழலில் இன்சூரன்ஸ் மூலம் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய், பேருதவியாக உள்ளது; தினமலர் நாளிதழுக்கு நன்றி.

இதையறிந்த என் சகோதரர்களும், 'தினமலர்' ஆண்டு சந்தா பெறுவதற்கு முடிவு செய்துள்ளனர். என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் உதவியாக தினமலர் இருந்ததை, வாழ்க்கையில் என்றும் மறக்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us