ஹரியானாவில் அதிநவீன உயர்ரக வெடிகுண்டு சோதனை வெற்றி
ஹரியானாவில் அதிநவீன உயர்ரக வெடிகுண்டு சோதனை வெற்றி
ADDED : மே 31, 2026 06:43 PM

சண்டிகர்: ஹரியானாவில் அதிநவீன உயர்ரக வெடிகுண்டு சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக செய்து முடித்தது.
பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள ராம்கர் மலைத்தொடரில் அமைந்துள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. விமானப்படையின் மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை நிகழ்ந்த இடத்தைச் சுற்றி 2 கிலோமீட்டர் தூரம் வரை 'பதற்றமான மண்டலமாக' அறிவிக்கப்பட்டது. உயர்ரக வெடிகுண்டின் சிதறல்கள் கிடைமட்டமாக 2 கி.மீ வரையிலும், செங்குத்தாக 1.5 கி.மீ உயரம் வரையிலும் சொல்லக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். ஆகவே, பானு, பில்லா, அஸ்ரேவாலி, நாகல் மற்றும் மோகினந்த் போன்ற அருகிலுள்ள கிராம மக்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சோதனை நேரத்தில் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
