தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ டாக்காவில் ஹிந்துக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

டாக்காவில் ஹிந்துக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

டாக்காவில் ஹிந்துக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

10


ADDED : ஜூன் 20, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

10

ADDED : ஜூன் 20, 2026 04:01 PM


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்கா: கடவுள் ஸ்ரீராமர் படத்தை அவமதித்த சம்பவத்தை கண்டித்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தீப்பந்தத்துடன் பேரணி நடத்தினர்.

நாட்டின் மிகப்பெரிய ஸ்ரீ ராமர் சிலையை உருவாக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி வங்கதேசத்தில் குறிப்பிட்ட சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், ஸ்ரீராமர் சிலை கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலை அமைப்பதற்கு எதிராக தங்களுக்கு முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது என இச்சிலையை கட்டிவரும் ஸ்ரீ ராதா கோவிந்தா கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிலை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கடவுள் ராமர் படத்தை அவமதித்தனர். இதற்கு எதிராக மாணவர்கள் பேரணி நடத்தியிருந்தனர். அதனை போலீசார் தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், ராமர் படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்து, டாக்காவில் நேற்று டாக்காவில் ஹிந்துக்கள் பேரணி நடத்தினர். தீப்பந்தம் ஏந்தியபடி ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டபடி சென்ற அவர்கள், ராமர் படத்தை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இது போன்ற நிகழ்வுகள் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து பல கவலைகளை எழுப்பி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us