ADDED : அக் 02, 2025 11:37 PM

மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் பண்டிட் சன்னுலால் மிஸ்ரா, நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
உ.பி.,யைச் சேர்ந்த பிரப ல ஹிந்துஸ்தானி பாடகர் சன்னுலால் மிஸ்ரா, 89. மிர்சாபூரில் உள்ள தன் இளைய மகளுடன் வசித்து வந்தார். நீண்ட காலமாக நோ ய்வாய்ப் பட்டிருந்தார்.
விமர்சனம் நேற்று முன்தினம் இரவு உடல்நிலை மோசமானதை அடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். மிஸ்ரா மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மிஸ்ராவின் இறுதி சடங்கு நேற்று மாலை நடந்தது.
கடந்த, 2010ல் பத்ம பூஷண் விருதும், 2020ல் பத்ம விபூஷண் விருதும் பெற்றுள்ளார். மறைந்த மிஸ்ராவுக்கு தபேலா கலைஞர் ராம்குமார் மிஸ்ரா என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
மிஸ்ராவின் மனைவி, நான்கு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், '2014ல் வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட என் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களுள் ஒருவர் மிஸ்ரா.
ஆழ்ந்த இரங்கல் 'அவரது அன்பையும், ஆசிர்வாதத்தையும் நான் பெற்றது அதிர்ஷ்டம். பாரம்பரிய இசையை மக்களிடம் கொண்டு செல்வதிலும், உலகளவில் நம் பாரம்பரியத்தை நிலைநாட்டுவதிலும் மிஸ்ரா விலைமதிப்பற்ற பங்காற்றியுள்ளார்.
'அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்' என குறிப் பிட்டுள்ளார்.