தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/2100க்குள் மனித இனமே அழிந்து விடும்; லான்செட் ஆய்வறிக்கையில் பகீர்

2100க்குள் மனித இனமே அழிந்து விடும்; லான்செட் ஆய்வறிக்கையில் பகீர்

2100க்குள் மனித இனமே அழிந்து விடும்; லான்செட் ஆய்வறிக்கையில் பகீர்

20


UPDATED : அக் 12, 2026 01:00 PM

ADDED : அக் 12, 2026 12:30 PM

Follow on GoogleFavourite on Google

20

UPDATED : அக் 12, 2026 01:00 PM ADDED : அக் 12, 2026 12:30 PM


20
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெர்லின்: ஜெர்மனியின் பெர்லினில் நடந்த உலக சுகாதார உச்சிமாநாட்டில், 35 நிபுணர்கள் அடங்கிய குழுவால் தயாரிக்கப்பட்ட 'தி லான்செட்' ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், ஏஐ தொழில்நுட்பம், அணு ஆயுதப் போர், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, நுண்ணுயிர் எதிர்ப்பு திறன், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு உள்பட 17 முக்கிய அச்சுறுத்தல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றால், மனித இனம் 2,100ம் ஆண்டுக்குள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அணுஆயுதப் போர் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் புகையினால் வளிமண்டலம் பெரிதும் பாதிக்கப்படும். இதன் காரணமாக, சூரிய ஒளி தடுக்கப்பட்டு, உலகளாவிய வெப்பநிலை குறையும். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உலகளவில் பேரழிவை ஏற்படுத்தும் பெரும் பஞ்சத்திற்கு வழிவகுக்கும்.

செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி மனித குலத்திற்கே எதிரானதாக மாறும். உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதில் ஏஐ தவறாகப் பயன்படுத்தப்படலாம். இது உலகளாவிய பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனக் கூறப்பட்டுள்ளது.

லான்செட் கமிஷனின் இணைத் தலைவர் கிறிஸ்டோபர் முர்ரே கூறியதாவது; தற்போதைய இந்த போக்கை தடுக்காவிட்டால், 2100க்குள் மனிதர்களின் வாழும் காலம் குறையும். மக்களை அச்சுறுத்துவதற்காக அல்லாமல், உலக தலைவர்கள் உரிய நேரத்தில் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ தொழில்நுட்ப முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் மட்டுமே இந்த பேரழிவுகளைத் தடுக்க முடியும், இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us