ஹூண்டாய் கார்களின் விலையும் ரூ.2.4 லட்சம் வரை குறைகிறது
ஹூண்டாய் கார்களின் விலையும் ரூ.2.4 லட்சம் வரை குறைகிறது
UPDATED : செப் 07, 2025 05:29 PM
ADDED : செப் 07, 2025 03:44 PM

புதுடில்லி: ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தம் காரணமாக ஹூண்டாய் நிறுவன கார்களின் விலையும் குறைகிறது. இது வரும் செப் 22 முதல் அமலாகும் என தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தம் காரணமாக சிறிய கார்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பெரிய கார்களின் விலையும் 40 சதவீத வரம்பில் வருகிறது. இதனால் கார்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. கார்களின் விலையை ரூ.60 ஆயிரம் முதல் குறையும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் கார்களின் விலையை குறைக்கப் போவதாகவும், இது செப்., 22 முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யுன்சு கிம் கூறுகையில், ஜிஎஸ்டி சீர்திருத்தம், ஆட்டோ மொபைல் துறைக்கு பெரிய பலனை கொடுக்கும். தனி நபர்களும் குறைந்த விலையில் வாகனங்களை பெற்றுக் கொள்வதற்கு வழியை ஏற்படுத்தும் . வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கும் நிலையில் எங்களது மாடல் கார்கள் மதிப்பு, புதுமை மூலம் அதனை உறுதி செய்வோம் எனக்கூறியுள்ளார்.