எனக்கு பிரதமரின் ஆசீர்வாதம் உள்ளது; பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேட்டி
எனக்கு பிரதமரின் ஆசீர்வாதம் உள்ளது; பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேட்டி
UPDATED : டிச 14, 2025 10:31 PM
ADDED : டிச 14, 2025 10:00 PM

புதுடில்லி: எனக்கு பிரதமரின் ஆசீர்வாதம் உள்ளது என பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
பாஜவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பீஹார் அமைச்சர் நிதின் நபின் கூறியதாவது: இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மத்திய தலைமை, பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மத்திய தலைமையிலுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு பிரதமரின் ஆசீர்வாதம் உள்ளது, அவர் வழங்கிய வழிகாட்டுதல பயன்படுத்தி கட்சியை மேம்படுத்துவேன். கட்சியினர் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உடன் பணியாற்றும்போது, கட்சியின் மூத்த தலைவர்கள் அதை எப்போதும் கவனத்தில் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு நிதின் நபின் கூறினார்.
கட்சியின் புதிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜ தெரிவித்துள்ளது. ஜனவரி 2020ம் தேதி முதல் பாஜ தேசியத் தலைவராக பணியாற்றி வரும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்குப் பிறகு அவர் (நிதின் நபின்) இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

