sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 என்னை சீண்டினால் நாட்டையே உலுக்குவேன்; மே.வங்க முதல்வர் மம்தா பகிரங்க எச்சரிக்கை

/

 என்னை சீண்டினால் நாட்டையே உலுக்குவேன்; மே.வங்க முதல்வர் மம்தா பகிரங்க எச்சரிக்கை

 என்னை சீண்டினால் நாட்டையே உலுக்குவேன்; மே.வங்க முதல்வர் மம்தா பகிரங்க எச்சரிக்கை

 என்னை சீண்டினால் நாட்டையே உலுக்குவேன்; மே.வங்க முதல்வர் மம்தா பகிரங்க எச்சரிக்கை

24


ADDED : நவ 26, 2025 02:05 AM

Google News

24

ADDED : நவ 26, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: ''என்னை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன். நாட்டையே உலுக்கி விடுவேன்,'' என, மத்திய பா.ஜ., அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான், உ.பி., குஜராத், ம.பி., உட்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது.

இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

எதிர் ப்பு தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினை போலவே, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் போங்கான் என்ற இடத்தில், எஸ்.ஐ.ஆர்., பணியை கண்டித்து நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் அடுத்தாண் டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ., படுதோல்வி அடையும். எத்தனை குறுக்கு வழிகளை பயன்படுத்தினாலும், அக்கட்சிக்கு இங்கு பூஜ்யம் தான் கிடைக்கும். எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக நாடு முழுதும் விரைவில் சுற்றுப் பயணம் மே ற்கொள்வேன்.

பா.ஜ.,வினர் என்னை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று காட்டி விடுவேன்; நாட்டையே உலுக்கி விடுவேன். சட்ட சபை தேர்தல் முடிந்ததும், நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். 2029 லோக்சபா தேர்தலில், மத்தியில் இருந்து பா.ஜ., விரட்டி அடிக்கப்படும். டில்லியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் துணிச்சல், மேற்கு வங்கத்துக்கு உள்ளது.

தேர்தல் கமிஷன், பா.ஜ.,வின் கமிஷனாக செயல்படுகிறது. எஸ்.ஐ.ஆர்., பணியை கண்டு மாநிலத்தின் உண்மையான வாக்காளர்கள் பயப்பட வேண்டாம்.

அனுமதிக்க மாட்டேன் பல ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, தேர்தல் நடக்க உள்ள சமயத்தில் அவசர கதியில் இந்த பணியை தேர்தல் கமிஷன் செய்கிறது.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியராக மாற விரும்புவதாகவும் உங்களை எழுதித் தரச் சொல்வர். எதற்கும் பயப்பட வேண்டாம்.

நான் இங்கு இருக்கும் போது, வாக்காளர் பட்டியலில் இருந்து உங்களை நீக்க அனுமதிக்க மாட்டேன். இந்த மண் ஒருபோதும், பா.ஜ.,வுக்கு பயப்படாது. திரிணமுல் காங்., இருக்கும் வரை, உங்களை யாராலும் தொடக் கூட முடியாது.

சட்ட வி ரோத ஊடுருவலுக்கு மத்திய பா.ஜ., அரசே காரணம். எல்லையில் பாதுகாப்புப் பணியில் எல்லை பாதுகாப்புப் படை ஈடு படுகிறது. விமான நிலையங்கள் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வசம் உள்ளன. அப்படி இருக்கையில் ஊடுருவலுக் கு யார் காரணம்?

பீஹாரில் பா.ஜ.,வின் விளையாட்டு காங்., கூட்டணிக்கு தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு அக்கட்சியின் விளையாட்டு, நுணுக்கங்கள் அனைத்தும் தெரியும். அதனால், பீஹாரில் ஆடிய விளையாட்டை மேற்கு வங்கத்தில் ஆடலாம் என, பா.ஜ., கனவில் கூட நினைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தொடர்பாக, வரும் 28ம் தேதி, டில்லியில் தேர்தல் கமிஷனர்களை திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் 10 பேர் அடங்கிய குழு சந்தித்து பேச உள்ளது.

விரக்தியால் அறைகூவல்! எஸ்.ஐ.ஆர்., பணியால் சட்ட விரோத ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவதால், விரக்தியின் உச்சத்தில் மம்தா பானர்ஜி இருக்கிறார். ராகுலை போலவே மத்திய அரசை எதிர்த்து போராடுவேன் என, அறைகூவல் விடுக்கிறார். அவரது இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். பிரதீப் பண்டாரி தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,







      Dinamalar
      Follow us