UPDATED : பிப் 24, 2026 10:38 PM
ADDED : பிப் 24, 2026 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பசும்பொன்னில் இன்று நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், புதுக்கட்சி துவங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். கட்சியின் பெயரை விரைவில் அறிமுகம் செய்வதாக கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் விழா, இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், சசிகலா சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அண்ணாதுரை எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் கொடியை வெளியிட்ட சசிகலா, புதுக்கட்சி துவங்குவதாகவும், கட்சியின் பெயரை விரைவில் அறிமுகம் செய்வதாகவும் தெரிவித்தார்.

