ஐசியூவுக்கு மாற்றப்படும் ஆபத்தான நிலையில் இண்டியா கூட்டணி: உமர் அப்துல்லா
ஐசியூவுக்கு மாற்றப்படும் ஆபத்தான நிலையில் இண்டியா கூட்டணி: உமர் அப்துல்லா
ADDED : டிச 06, 2025 07:31 PM

புதுடில்லி: இண்டியா கூட்டணி, ஆபத்தான நிலையில் உள்ளது, மேலும் ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய அபாயத்தில் உள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
டில்லியில் இன்று நடைபெற்ற ஆங்கில நாளிதழ் தலைமைத்துவ மாநாட்டில் உமர் அப்துல்லா பேசியதாவது:
கூட்டணியில் உள்ள உட்பூசல்கள், பாஜவின் தொடர்ச்சியான தேர்தல் முயற்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால், இண்டியா கூட்டணி ஆபத்தான நிலையில் இருக்கிறது, அது அவசர சிகிச்சை பிரிவான ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய ஆபத்தில் உள்ளது.இண்டியா கூட்டணியில் அமைப்பு ரீதியான, தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.
இந்த தொடர் தோல்விக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது, பீஹாரில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தொகுதி பங்கீட்டில் விலக்கப்பட்டது ஆகிய நடவடிக்கைகள் இண்டியா கூட்டணிக்குள் முக்கிய பிரச்னையாக இருந்தது. பாஜவில் வலுவான உழைக்கும் நெறிமுறைகள் இருக்கிறது. அந்த வேகத்துடன் பாஜ ஒவ்வொரு தேர்தலிலும் உறுதியுடன் போட்டியிடுகிறது. அதேவேளையில் இண்டியா கூட்டணியில் கட்சிகள் சில சமயங்களில் அலட்சியமாக செயல்படுவது தெரியவருகிறது.
இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.

