நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி
நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 05, 2026 09:11 AM

நமது நிருபர்
பிரதமர் மோடி ஜூலை 6ம் தேதி இந்தோனேசியாவில் தொடங்கி, ஜூலை 11ம் தேதி நியூசிலாந்தில் நிறைவடையும் தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இது தொடர்பாக ஆஸ்திரேலியா பிரதமர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா- ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நமது வருடாந்திர தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக எனது நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.
வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்தி வருவது இரு நாடுகளுக்கும் நன்மைகளை அளித்து வருகிறது. உலகின் நான்காவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற வகையில், இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு ஒரு முக்கிய பொருளாதாரப் பங்காளியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
