மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடி: காந்தி ஜெயந்தி விழாவில் பில்கேட்ஸ் புகழாரம்
மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடி: காந்தி ஜெயந்தி விழாவில் பில்கேட்ஸ் புகழாரம்
ADDED : அக் 03, 2025 10:16 AM

நியூயார்க்: மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது என அமெரிக்காவில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் தொழிலதிபர் பில்கேட்ஸ் பாராட்டி உள்ளார்.
காந்தியின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய கலாசாரம், கலைகள் மற்றும் உணவு வகைகளை காட்சிப்படுத்தும் வகையில், சியாட்டிலில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று (அக் 03) விழா நடந்தது. இந்ந நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் பேசியதாவது: மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் நாம் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறோம்.
காந்தியின் கொள்கைகள், ஒவ்வொரு நபரின் சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றிக்கு அடித்தளமாக இருக்கின்றன.
உலக அளவில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இந்தியாவுடன் இணைய நாங்கள் எதிர்நோக்குகிறோம். இவ்வாறு பில்கேட்ஸ் பேசினார். காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் சியாட்டில் முழுவதும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.