தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/'இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு': அமெரிக்கா அறிவிப்பு

'இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு': அமெரிக்கா அறிவிப்பு

'இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு': அமெரிக்கா அறிவிப்பு


UPDATED : டிச 06, 2025 08:17 AM

ADDED : டிச 06, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2025 08:17 AM ADDED : டிச 06, 2025 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை 'முக்கிய கூட்டாளி' நாடாக அறிவித்துள்ளது. மேலும், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் அறிவித்துள்ளது.

2025 - 26 ஆண்டுக்கான புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை, அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதில், இந்தியாவை முக்கிய கூட்டாளி நாடாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாவது: உலக பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு நிலைத்தன்மை, தொழில் நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் இந்தியா முக்கிய சக்தியாக உள்ளது. அதனால், இந்தியாவுடன் நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது, அமெரிக்காவின் பாதுகாப்பு குறிக்கோளில் முக்கிய அங்கமாக உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியையும், தொழில்நுட்ப திறன்களையும், மிகச்சிறந்த சக்தியாக அமெரிக்கா மதிப்பிடுகிறது. இந்தோ - பசுபிக் பகுதியில் சீனாவின் விரிவாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படுவது, அந்த பகுதியின் பாதுகாப்பு அமைப்பில் முக்கியத் தூணாக இருக்கும்.

பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு:


ராணுவப் பயிற்சிகள், கடல் பாதுகாப்பு கண்காணிப்பு, புதிய தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் பாதுகாப்பு முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம், பாதுகாப்புக் கருவிகள் மேம்பாடும் அதிகரிக்க உள்ளன.

ஆயுதத் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா - அமெரிக்கா கூட்டணி பலமாக மாற உள்ளது. எதிர்கால பாதுகாப்பு சவால்களை சமாளிக்க, இணைந்த செயல் திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரித்தனர்.

ரஷ்ய அதிபர் புடின் அரசு முறை பயணமாக இந்தியா வந்து சென்றுள்ள நிலையில் இவ்வாறு அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us