UPDATED : ஆக 26, 2026 10:35 PM
ADDED : ஆக 26, 2026 05:13 PM

புதுடில்லி: கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளதாவது: நேபாள பிரதமர் பாலேந்திர ஷா உடன் பேசினேன். வெள்ளத்தில் இறந்தவர்களுக்காக எனது ஆறுதலை தெரிவித்தேன். இந்த துயரமான நேரத்தில், நேபாளத்தின் சகோதர மற்றும் சகோதரிகளுடன் இந்திய மக்கள் துணை நிற்பார்கள்.
நேபாளத்திற்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இந்திய குழுவினர் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமர் நன்றி
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நேபாள பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரதமர் மோடி அவர்களே ,உங்களின் அன்பான அழைப்பிற்கும், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததற்கும் நன்றி. இந்த இக்கட்டான நேரத்தில் நேபாளத்திற்கு நீங்கள் வழங்கியுள்ள அன்பான ஆதரவு வார்த்தைகளையும், தாராளமான உதவியையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம். இந்த ஆதரவு, நாங்கள் பெரிதும் மதிக்கும் நமதுஇரு நாடுகளுக்கு இடையிலான நீடித்த நட்புறவின் பிரதிபலிப்பு ஆகும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.
