இந்தியா- ரஷ்யா வர்த்தகம் 80 சதவீதம் அதிகரிப்பு: புடின் மகிழ்ச்சி
இந்தியா- ரஷ்யா வர்த்தகம் 80 சதவீதம் அதிகரிப்பு: புடின் மகிழ்ச்சி
ADDED : டிச 05, 2025 06:39 PM

புதுடில்லி: இந்தியா - ரஷ்யா இடையிலான வர்த்தகம், கடந்த 3 ஆண்டுகளில் 80 சதவீதம் அதிகரித்துள்ளது என அதிபர் புடின் கூறியுள்ளார். 2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தகம் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையிலான வர்த்தக மாநாட்டு டில்லியில் நடந்தது. இம்மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் புடினும் பங்கேற்றார்.
முன்னணி
புடின் பேசியதாவது: ரஷ்ய குழுவினர் எரிசக்தி விஷயத்துக்காகவும், எண்ணெய் மற்றும் காஸ் இறக்குமதிக்கு கையெழுத்து போட மட்டும் வரவவில்லை. பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் உறவு வளர்ச்சி பெறுவதை நாங்கள் விரும்புகிறோம். இந்தியா பல துறைகளில் பரந்த மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகளை கொண்டுள்ளது என்றும், ஆனால், இதுவரை இரு தரப்பினரும் அதைப் பார்க்க விரும்பும் அளவுக்கு அவை பயன்படுத்தப்படவில்லை என்றும் பிரதமர் மோடி தனிப்பட்ட சந்திப்புகளில் கூறியிருந்தார். அதனால், தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட கொள்கையை பின்பற்றி வருகிறது. அதேநேரத்தில் மிகச்சிறந்த பலன்களையும் அடைந்து வருகிறது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இந்திய பொருளாதாரம், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும்.
பிரதமர் மோடியின் சிறந்த பொருளாதாரக் கொள்கை மற்றும் மேக் இன் இந்தியா திட்டம் போன்ற மைல்கள் முயற்சிக்கு நன்றி, இந்தியா தொழில்நுட்பரீதியாக இணையாண்மை கொண்ட நாடாக மாறி வருகிறது. இந்தியாவின் ஐடி மற்றும் மருந்துதுறைகள் உலகின் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன.
இரு நாடுகளும் நீண்ட கால வர்த்தக கூட்டாளிகள். வர்த்தகமானது நிலையான வேகத்தில் வளர்ந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 80 சதவீதம் இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் அதிகரிப்பதற்கான பரந்த வாய்ப்புகள் உள்ளன. ரஷ்யாவும், இந்தியாவும் பெரிய நுகர்வோர் சந்தைகளை கொண்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முற்றிலும் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட கொள்கையுடன் பொருளாதார துறையில் மிகச்சிறந்த முடிவுகளை அடைகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு புடின் பேசினார்.
நம்பிக்கை
பிரதமர் மோடி பேசியதாவது: பெரிய வர்த்தக குழுவை அதிபர் புடின் அழைத்து வந்தது பெரிய நடவடிக்கை. இந்தியா மற்றும் யுரேஷியா பொருளாதார யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இரு தரப்பு வர்த்தகத்தை 2030ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால், அதற்கு 2030ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இந்த இலக்கை முன்கூட்டியே அடைய உறுதியுடன் நாங்கள் முன்னேறி வருகிறோம்.
எங்களது நம்பிக்கை முன்னேறி வருகிறது. வரி மற்றும் வரி அல்லாத தடைகள் குறைக்கப்படுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் நாம் அடைந்துள்ள வேகம் மற்றும் அளவு முன்னோடியில்லாதது. சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற கொள்கையை பின்பற்றி இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. திறன்வாய்ந்தவர்களின் தலைநகரமாக இந்தியா மாறுகிறது. நமது திறமையான இளைஞர்கள், உலகத்துக்கு தேவையான எதையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

