தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இந்தியா - யுஏஇ விமான கட்டணம் குறைகிறது : எவ்வளவு தெரியுமா

இந்தியா - யுஏஇ விமான கட்டணம் குறைகிறது : எவ்வளவு தெரியுமா

இந்தியா - யுஏஇ விமான கட்டணம் குறைகிறது : எவ்வளவு தெரியுமா

4


UPDATED : செப் 01, 2026 06:31 PM

ADDED : ஆக 31, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2026 06:31 PM ADDED : ஆக 31, 2026 10:06 PM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: செப்டம்பர் 13ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்திற்கான விமானக் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல் பயணிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் இருந்து யுஏஇக்கான விமான கட்டணம் அதிகமாக இருந்தது. அங்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையிலும், நிறுவனங்களில் பணிக்கு சேர்வதற்கான காலக்கெடு நெருங்கும் நிலையில் இந்த கட்டண உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கு நிதிச்சுமையையும், மனக்கவலையையும் ஏற்படுத்தியது. இதற்காக பல செலவுகளை குறைத்து வந்தனர். பணத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக, நேரடி விமானங்களை தவிர்த்துவிட்டு மாற்றுவழகளை ஆராயத்துவங்கினர்.

இந்நிலையில், வரும் செப்.,13ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்வதற்கான விமானக் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. 49 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை விலை குறையலாம் எனத் தெரிகிறது. ஆக.,30 ல் 54,310 ரூபாய் ஆக இருந்த கட்டணம், செப்டம்பர் 13ம் தேதிக்கு பிறகு 23 ஆயிரம் ரூபாய் ஆக குறைய வாய்ப்பு உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளாவின் கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து யுஏஇ கிளம்பும் விமானங்களின் கட்டணமும் குறையக்கூடும். இதனால், பயணிகள் 1,200 ஏஇடி( ரூ.31,187 ) மிச்சப்படுத்த முடியும்.

பெங்களூருவில் இருந்து கிளம்பும் விமானங்களில் கட்டணம் 64 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது. ஆக.,30 அன்று 2,513 ஏஇடி( ரூ.65,310) ஆக இருந்த கட்டணம் 914 ஏஇடி( 23,754 ரூபாய்) ஆக குறைய வாய்ப்பு உள்ளது.

டில்லியில் இருந்து கிளம்பும் விமானங்களில் 2,227 ஏஇடி( 57,878 ரூபாய்)யில் இருந்து 825 ஏஇடி(21,441 ரூபாய்) ஆகவும்

ஐதராபாத்தில் இருந்து கிளம்பும் விமானங்களில் 1,777 ஏஇடியில் (46,182 ரூபாய்) இருந்து 758 ஏஇடி (19699 ரூபாய்)ஆகவும்

மும்பையில் இருந்து கிளம்பும் விமானங்களில் 1,460 ஏஇடி( 37,944 ரூபாய்)ல் இருந்து 739 ஏஇடி (19,206 ரூபாய்)ஆகவும் குறையக்கூடும் என தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us