ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் மீண்டும் உறுப்பினராக தேர்வானது இந்தியா!
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் மீண்டும் உறுப்பினராக தேர்வானது இந்தியா!
ADDED : அக் 15, 2025 08:53 AM

புதுடில்லி: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு பெற்றுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் அண்மையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கையை சுட்டிக்காட்டி, மனித உரிமைகளுக்கு எதிரான, மிகவும் மோசமான நாடு பாகிஸ்தான் என்று இந்தியா குற்றம்சாட்டியது.
இந் நிலையில்,ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகி உள்ளது. இந்த விவரத்தை நியுயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
ஐ.நா.வில் 2026-28ம் ஆண்டு காலத்திற்கான மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினராக இந்தியா 7வது முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மகத்தான ஆதரவை அளித்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் நன்றி.
இந்த தேர்வு மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்களுக்காக இந்தியா அளித்து வரும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. பதவி காலத்தில் இதே நோக்கத்தை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம்.
இவ்வாறு ஹரிஷ் தமது பதிவில் கூறி உள்ளார்.