மெட்ரோ ரயில் சேவையில் அமெரிக்காவை விரைவில் இந்தியா முந்திவிடும்!
மெட்ரோ ரயில் சேவையில் அமெரிக்காவை விரைவில் இந்தியா முந்திவிடும்!
ADDED : டிச 20, 2025 10:35 PM

புதுடில்லி: மெட்ரோ ரயில் சேவையில் அமெரிக்காவை விரைவில் இந்தியா முந்திவிடும் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மனோகர் லால் கட்டார் கூறியதாவது: இந்தியாவின் செயல்பாட்டு மெட்ரோ நெட்வொர்க் 26 நகரங்களில் 1,090 கி.மீ. நீளத்திற்கு விரிவடைந்துள்ளது. இந்தியா அமெரிக்காவை முந்தி உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் சேவைகளை கொண்ட நாடாக மாறும் தருவாயில் உள்ளது.
இந்தியா தற்போது உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது, சீனா மற்றும் அமெரிக்கா மட்டுமே இந்தியாவை விட முன்னிலையில் இருக்கின்றன. பல்வேறு இந்திய நகரங்களில், 900 கி.மீ. மெட்ரோ திட்டங்கள் முழு வீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அமெரிக்காவை இந்தியா விஞ்சிவிடும். அந்தளவுக்கு பல்வேறு இந்திய நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் தயாரிப்போம் முயற்சியின் கீழ், 75% மெட்ரோ ரயில் பெட்டிகளும், சிக்னலிங் உபகரணங்கள் இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டியது. இவ்வாறு மனோகர்லால் கட்டார் கூறினார்.

