UPDATED : டிச 24, 2025 12:37 PM
ADDED : டிச 24, 2025 12:29 PM

டொரன்டோ : கனடாவில் இந்தியப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
டொரன்டோ நகரில் வசித்த இந்தியப் பெண் ஹிமான்ஷி குரானா, 30. என்பவர் கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை என்று போலீசாருக்கு புகார் வந்தது. மறுநாள் காலை குடியிருப்பு ஒன்றில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
போலீசார் விசாரணையை துவக்கினர். அதில், ஹிமான்ஷி குரானாவின் ஆண் நண்பரான அப்துல் கபூரிக்கு,32, இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, அவரை தேடி வருகின்றனர்.
ஹிமான்ஷி குரானா கொலைக்கு டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.

