தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இந்தியாவில் முதல் கருணைக்கொலை; 13 ஆண்டு காலமாக கோமாவில் இருந்த நபர் உயிரிழப்பு

இந்தியாவில் முதல் கருணைக்கொலை; 13 ஆண்டு காலமாக கோமாவில் இருந்த நபர் உயிரிழப்பு

இந்தியாவில் முதல் கருணைக்கொலை; 13 ஆண்டு காலமாக கோமாவில் இருந்த நபர் உயிரிழப்பு


ADDED : மார் 24, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 07:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஹரிஷ் ராணா டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதன்மூலம், இந்தியாவில் முதல் கருணைக்கொலை நிகழ்ந்துள்ளது.

உ.பி.,யின் காஜியாபாதைச் சேர்ந்த ஹரீஷ் ராணா, கடந்த 2013ல் பஞ்சாப் பல்கலையில் படித்தார். அவர் தங்கி இருந்த விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் 13 ஆண்டுகளாக கோமா நிலையிலேயே உயிர் வாழ்ந்து வந்தார்.

சுவாசிப்பதற்கும், உணவு அளிப்பதற்குமான குழாய் அவருக்கு பொருத்தப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கைவிட்ட நிலையில், ஹரீஷ் ராணாவுக்கான உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொருத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளை அகற்றி, கருணை கொலைக்கு அனுமதி அளித்தனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 24) இந்தியாவில் கருணைக்கொலைக்கு அனுமதி பெற்ற முதல் நபரான ஹரிஷ் ராணா டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் முதல் கருணைக்கொலை நிகழ்ந்துள்ளது. இவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us