உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'திவ்யாஸ்த்ரா எம்.கே.3'... ஓடும் ஜீப்பில் இருந்து வெற்றிகரமாக சோதனை
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'திவ்யாஸ்த்ரா எம்.கே.3'... ஓடும் ஜீப்பில் இருந்து வெற்றிகரமாக சோதனை
ADDED : ஆக 16, 2026 05:06 PM

லக்னோ: முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலக்கை குறிவைத்து தாக்கும் தற்கொலை ட்ரோன் (Divyastra MK3) சோதனை இன்று வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
டிஜி ப்ரோபல்ஷன் உருவாக்கிய உள்நாட்டு ஜெட் இன்ஜின் மூலம் இயங்கும் இந்த தற்கொலை படை ட்ரோன், லக்னோவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.. இந்தத் திட்டம் துவங்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள்ளேயே, இந்த ஆயுதத்திற்கு தேவையான எந்தவொரு உபகரணங்களையும் இறக்குமதி செய்யாமல், முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது; இது வெறும் சோதனைப் பயணம் மட்டுமல்ல. இந்தியா தனது சொந்த எல்லைக்குள் ஒரு துல்லியமான தாக்குதல் அமைப்பை முழுமையாக வடிவமைத்து, தயாரித்துப் பறக்கவிட முடியும் என்பதற்கான சான்று. இது சுயசார்பு திட்டத்தின் செயல்பாடு ஆகும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, ஆந்திராவின் கர்னூல் அருகே உள்ள சோதனைத் தளத்தில் ஆளில்லா வான்வழி வாகனத்திலிருந்து ஏவப்படும் துல்லியமான வழிகாட்டுதல் ஏவுகணையின் இறுதி கட்ட மேம்பாட்டுச் சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த வெற்றிகரமான சோதனைகளுக்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
