தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; புனேவில் அவசர தரையிறக்கம்

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; புனேவில் அவசர தரையிறக்கம்

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; புனேவில் அவசர தரையிறக்கம்

2


ADDED : நவ 15, 2026 12:09 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : நவ 15, 2026 12:09 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது சிறப்பு நிருபர்-

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து குவஹாத்திக்கு பயணிகள் 192 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சற்று நேரத்திலேயே, விமானத்தின் கியரில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த புனே விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை தரையிறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. பிறகு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் குவஹாத்திக்கு பயணம் செய்ய மாற்று விமானத்தை இண்டிகோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. விமானி துரிதமாக செயல்பட்டதால், விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் என 192 பேரும் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us