எரிபொருள் கசிவு: இண்டிகோ விமானம் அவரமாக தரையிறக்கம்
எரிபொருள் கசிவு: இண்டிகோ விமானம் அவரமாக தரையிறக்கம்
ADDED : அக் 22, 2025 08:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாரணாசி: கோல்கட்டாவில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு 166 பேருடன் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விமானம் அவசரமாக வாரணாசியின் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் நடந்தன. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.