தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ லஞ்ச புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

 லஞ்ச புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

 லஞ்ச புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

8


ADDED : ஆக 23, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

8

ADDED : ஆக 23, 2026 06:06 PM


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் நெடுஞ்செழியன் என்ற கட்டு பாண்டி 45, வெளியிட்ட லஞ்ச புகார் வீடியோவையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிபாபு 52, ஏட்டு ஜெயராஜை 45, ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மணிவண்ணன் சஸ்பெண்ட் செய்தார்.

நெற்குப்பை ஆத்திக்காடு நெடுஞ்செழியன் சிங்கம்புணரியில் சித்த மருத்துவம் மூலம் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதனால் அப்பகுதியினர் அவரை புத்துார் கட்டு பாண்டி என அழைக்கின்றனர்.

முறையான கல்வி சான்று இன்றி சிகிச்சை அளிப்பதாக மருத்துவ இணை இயக்குனர் புகாரில் போலீசார் ஜனவரியில் அவரை கைது செய்து கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். பின் ஜாமினில் வந்தவர் தன் தோப்பில் செம்புவேல் முருகன் கோயில் கட்டி அங்கு சிகிச்சை அளித்து வந்தார்.

இன்ஸ்பெக்டர் சீனிபாபு மாதந்தோறும் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும், கொடுக்காவிட்டால் பொய் வழக்கு போடுவேன் என மிரட்டுவதாகவும் கட்டுபாண்டி வீடியோ வெளியிட்டார். இதற்கு முன்பாகவும் இன்ஸ்பெக்டராக இருந்த தயாளன் (தற்போது திருச்சியில் பணிபுரிகிறார்) பெயரை கூறி ஏட்டு ஜெயராஜ் 4 மாதங்களுக்கு முன் பணம் பெற்றதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ புகாரின் உண்மை தன்மையை அறிய விசாரணைக்கு எஸ்.பி., அபிேஷக் குப்தா உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஏட்டு ஜெயராஜை டி.ஐ.ஜி., மணிவண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us