தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஏஐ மனிதகுலத்துக்கு எதிராக மாறாமல் இருக்க சர்வதேச விதிகள் தேவை; ஐநாவில் நிபுணர்கள் வலியுறுத்தல்

ஏஐ மனிதகுலத்துக்கு எதிராக மாறாமல் இருக்க சர்வதேச விதிகள் தேவை; ஐநாவில் நிபுணர்கள் வலியுறுத்தல்

ஏஐ மனிதகுலத்துக்கு எதிராக மாறாமல் இருக்க சர்வதேச விதிகள் தேவை; ஐநாவில் நிபுணர்கள் வலியுறுத்தல்


ADDED : செப் 24, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 08:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: 'செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பம் மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில் கட்டுப்படுத்த சர்வதேச பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும்' என, முன்னணி ஏ.ஐ., நிறுவனங்களின் தலைவர்கள் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தினர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா.,வின் பொது சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க, 193 உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த விவாதங்களும் நடந்து வருகின்றன.

உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் ஏ.ஐ., தொழில்நுட்பமும் அதில் ஒன்று. இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், 'ஆந்த்ரோபிக்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடை, 'ஓபன்ஏஐ' தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் 'ஹக்கிங் பேஸ்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கிளெமென்ட் டெலாங்க் ஆகியோர் பங்கேற்று ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து பேசினர்.

சாம் ஆல்ட்மேன் கூறுகையில், “ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடு ஒரு நிறுவனம் அல்லது ஒரு நாட்டின் கைகளில் மட்டும் குவிந்து விடக்கூடாது. அதேசமயம், மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், மக்கள் தங்கள் வாழ்க்கை குறித்த முடிவுகளில் அதிக அதிகாரம் பெறுவதற்கும் ஏ.ஐ., உதவும்”, என்றார்.

ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ பேசுகையில், “ஏ.ஐ., தொழில்நுட்பத்தை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், அது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே ஆபத்தாக மாறக்கூடும். 'உயிரியல் ஆயுதங்களை உருவாக்க ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அனுமதிக்கக் கூடாது. ஏ.ஐ., மாதிரிகளுக்கு என்னென்ன திறன்கள் உள்ளன என்பதை சரிபார்க்கும் முறைகள் உருவாக்கப்பட வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை சோதிப்பதற்கு பொதுவான சர்வதேச தரநிலைகள் தேவை,” என்றார்.

ஆனால், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு எதிராக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. 'புதிய சர்வதேச நிர்வாக அமைப்புகளை உருவாக்குவதற்கான காரணமாக ஏ.ஐ., மீதான கவலைகளை பயன்படுத்தக் கூடாது. இந்த தொழில்நுட்பத்தின் பலன்களை அமெரிக்காவின் நட்பு நாடுகளும் பெற வேண்டும்' என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் வெள்ளை மாளிகை அறிவியல் ஆலோசகர் மைக்கேல் கிராட்ஸியோஸ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அரசு தளத்தில் ஊடுருவிய ஏஐ ஏஜென்ட்!
ஏ.ஐ., ஏஜென்ட் என்பது செயற்கை நுண்ணறிவின் மேம்பட்ட தொழில்நுட்பம். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய தானாகவே செயல்படக்கூடியது. ஒவ்வொரு கட்டத்திற்கும் கட்டளை வழங்க வேண்டியதில்லை. இந்நிலையில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் இந்த ஏஜென்ட் ஆஸ்திரேலியர்களின் சுகாதாரத் தரவுகள் அடங்கிய அரசு இணையதளத்தில் ஊடுருவியதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஏ.ஐ.,யை கட்டுப்படுத்த சர்வதேச விதிகள் தேவை என்ற குரல் ஒலித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us